உத்தர பிரதேச மாநிலத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முயற்சிப்பதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரு மாநாட்டில் பேசுகையில், ``2027 ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும் மாற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமும், இதனை நோக்கி உழைக்கும்போதுதான் டிரில்லியன் டாலர் இலக்கை அடைய முடியும்.
அதேபோல, 2029 - 30 ஆம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், 2047-க்குள் 6 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும் மாறும் என்பதே எங்கள் இலக்கு. உத்தர பிரதேசம் நிச்சயமாக அதனை அடையும்.
8 ஆண்டுகளுக்கு முன்னர், உத்தர பிரதேசத்தில் முதலீடு செய்வது அர்த்தமற்றதாக இருந்தது. முதலீடு செய்பவர் பாதுகாப்பாக இல்லாதபோது, அவரின் முதலீடு எப்படி பாதுகாப்பாக இருக்கும்?
இதனை மாற்றுவதற்காக, ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையை அரசு ஏற்றுக் கொண்டது’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் என்கவுன்டர்கள் குறித்தும், ``குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பூமியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுமை குறைக்கப்பட வேண்டும். பூமியின் சுமை மட்டுமல்ல; மக்களுக்கும்தான்.
எங்கள் மகள்களின் பாதுகாப்புடன் விளையாடினால், உங்களுக்காக எமதர்ம ராஜா காத்திருப்பார். நரகத்தில் உங்களுக்கான பாதையை ஏற்படுத்தி, டிக்கெட்டையும் வழங்குவார்’’ என்று கூறினார்.
இதையும் படிக்க: விடுமுறையிலோ பணிநேரம் முடிந்தோ அலுவலக அழைப்பை ஏற்பது கட்டாயமில்லை: மசோதா தாக்கல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.