FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.யில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது: யோகி சர்ச்சைப் பேச்சு

உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது என யோகி ஆதித்யநாத் பேசியது குறித்து...

Updated On : 11 பிப்ரவரி 2026, 8:47 am IST
யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் 2026 - 27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப். 11) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாபர் மசூதி குறித்து யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி பகுதியில் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

Advertisement

Advertisement

''நாங்கள் ராம் லீலாவுக்காக வந்து அதே இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்று கூறினோம். இதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? தீர்ப்பு நாளுக்காக பலரும் காத்திருந்தனர்.

இந்தியாவின் பாரம்பரியம், புகழ்பெற்ற கலாசாரம் மற்றும் சனாதன தர்மத்திற்கு மரியாதை செலுத்தும் வகையிலான தீர்ப்பு, நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் காவிக் கொடி தொடர்ந்து பறக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்தியாவையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது.

பாஜக அரசு, சொல்வதை மட்டுமே செய்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று கூறினோம். அதனைச் செய்தோம். 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்கு பெருமைமிகு தருணம் கிடைத்துள்ளது. கடந்த ஆட்சி, ராமர் கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மக்கள் விதிகளைப் பின்பற்றி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். விதிகளை பின்பற்றுபவர்கள் பலனடைவார்கள். பின்பற்றாதவர்கள் நகரத்திற்குச் செல்வார்கள்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Babri Masjid won't be rebuilt till eternity: Yogi reiterates Ram Temple pledge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments