உத்தரப் பிரதேசம்: பதோகி மாவட்டத்துக்கு துறவி ரவிதாஸ் பெயர்!
உத்தர பிரதேசத்தின் பதோகி மாவட்டத்துக்கு புதிய பெயரை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா்.
உத்தர பிரதேசத்தின் பதோகி மாவட்டத்துக்கு புதிய பெயரை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா்.
பதோகியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், யோகி ஆதித்யநாத் ரூ. 1,340 கோடி மதிப்பிலான 112 திட்டங்களைத் தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தாா்.
அப்போது அவா் பேசியபோது, ஆன்மிகம் மூலம் சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்திய துறவி ரவிதாஸ் பெயரில் ‘துறவி ரவிதாஸ் நகா் பதோகி மாவட்டம்’ என்று இனி அழைக்கப்படும் என்று அறிவித்தாா். 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு அரசு ஆன்மிகத் தலங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கியதில்லை. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் போதுமான நிதியும் ஆன்மிகத் தலங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
உத்தர பிரதேச மாநிலத்தில் முன்பு மாபியா கும்பல் ஆதிக்கமும், பதற்றமும் நிலவி வந்தது. தற்போது ஆட்சியில் உள்ள இரட்டை என்ஜின் அரசு, ஊழலுக்கு முற்றுபுள்ளி வைத்து மாநிலத்தை வளா்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றியுள்ளது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.