FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உ.பி. பேரவைத் தேர்தல்: புதிய கூட்டணி உருவாக்கம்! சந்திரசேகர் ஆசாதுக்கு ஒவைசி ஆதரவு!

உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசி ஆதரவில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது குறித்து...

சந்திரசேகர் ஆசாத் மற்றும் அசாதுதீன் ஒவைசி - X
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அகில இந்திய மஜ்லீஸ் - இ - இதேஹாதுல் முஸ்லிமீன் கட்சி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில், வரும் 2027 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக, சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தத் தேர்தலில் போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் - இ - இதேஹாதுல் முஸ்லிமீன் கட்சி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி இணைந்து இன்று (நவ. 12) சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா (எஸ்பிஎம்) எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில், ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தலீத் சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நலனில் இந்தக் கூட்டணி கவனம் செலுத்தும் எனவும், இந்தக் கூட்டணியின் பொதுக்கூட்டம் வரும் நவ.26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், ஒவைசி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“உத்தரப் பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்கு, இந்தக் கூட்டணி வலிமையான மாற்றமாக இருக்கும் என்பதை நான் நம்பிக்கையோடு கூறுகிறேன்.

நமது சகோதரர் சந்திரசேகர் ஆசாத் இந்தக் கூட்டணியின் தலைவராகவும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராகவும் இருப்பார் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, 2027 தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்கு ஒவைசி ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எஸ்பிஎம் கூட்டணி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

assembly elections in Uttar Pradesh, AIMIM and the Azad Samaj Party have formed a new alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.