முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாஜக அரசு மீட்டெடுத்துள்ளது! ஆதித்யநாத்
உ.பி. ஐவுளி மாநாடு தொடக்க விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியது பற்றி..
முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் விரைவான தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இரண்டு நாள்கள் நடைபெறும் உ.பி. ஐவுளி மாநாடு தொடக்க விழாவில் உரையாற்றிய அவர்,
2017-க்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நிலவிய சூழல் பற்றி யாருக்கும் தெரியாதது அல்ல. சட்டம் - ஒழுங்கு நிலை சீர்குலைந்திருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாஃபியாக்களால் நடத்தப்படும் மாற்று அரசு செயல்பட்டது. அது கிட்டத்தட்ட ஒரு மாவட்டம், ஒரு மாஃபியா என்ற நிலையில் இருந்ததாக சாமஜவாதி கட்சி அரசை மறைமுகமாக அவர் சாடினார்.
Advertisement
Advertisement
தற்போதைய சூழலோடு ஒப்பிடுகையில், இன்று உத்தரப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுவதாகவும், குற்றம், குற்றவாளிகள் மற்றும் ஊழல் ஆகியவற்றின் மீது 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் இன்று ஊரடங்கு, கலவரம் மற்றும் மாஃபியா கும்பல்களின் அச்சுறுத்தல் இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் விரைவான தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளதாகவும் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Tuesday asserted that the state has undergone a major transformation since 2017, moving from an era which saw 'one district, one mafia', riots, policy paralysis to one characterised by rule of law, investor confidence and rapid industrial growth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.