இந்தியாவின் பாரம்பரியத்தை இழிவுபடுத்துவதை பிறப்புரிமையாகக் கருதுகிறார் ராகுல்! உ.பி. முதல்வர்!
இந்திய பாரம்பரியத்தையும் உத்தரப் பிரதேசத்தின் மரியாதையையும் திட்டமிட்டு இழிவுபடுத்துகிறார்... யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
இந்தியாவின் மரபுகள் மற்றும் பாரம்பரியத்தை இழிவுபடுத்துவதை ராகுல் காந்தி தனது பிறப்புரிமையாகக் கருதுவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் தலைவரான ராணா பெனி மாதவ் பக்ஷ் சிங்கின் 222-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார்.
ஒரு தனிநபராக ராகுல் காந்தியிடம் இருந்து நாட்டிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், நாட்டின் மிக உயர்ந்த மன்றமான நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக, நாட்டின் ஜனநாயகத்திற்கு நீங்கள் பொறுப்புடையவர்.
Advertisement
Advertisement
நீங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துள்ளீர்கள்; அந்த உறுதிமொழியை ஏற்ற பிறகும், இந்தியாவின் மரபுகள் மற்றும் பாரம்பரியத்தை இழிவுபடுத்துவதை உங்கள் பிறப்புரிமையாகக் கருதுகிறீர்கள்.
உத்தரப் பிரதேசத்திற்கு வெளியே செல்லும்போது நீங்கள் மாநிலத்தை அவதூறு செய்து இழிவுபடுத்துகிறீர்கள்; இந்தியாவிற்கு வெளியே செல்லும்போது இந்தியாவையே இழிவுபடுத்துகிறீர்கள்.
மேலும், எல்லைகளில் இந்திய ராணுவம் எதிரிகளுடன் போரிடும்போதெல்லாம், நீங்கள் வீரர்களிடம் ஆதாரம் கேட்கிறீர்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான நாட்டின் போராட்டத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேசவிரோத சக்திகளை ஊக்குவிக்கிறீர்கள்.
காந்தியின் மனுஸ்மிருதி குறித்த கருத்துகளைக் குறிப்பிட்ட அவர், நீங்கள் மனு, ராமர் அல்லது இந்தியாவின் பாரம்பரியம் குறித்து கருத்து தெரிவிக்கிறீர்கள்.
மனுவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால், அதர்வ வேதம், சதபத பிராமணம் மற்றும் மத்ஸ்ய புராணம் (மத நூல்கள்) ஆகியவற்றை படியுங்கள். அனைத்துத் தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும்," என்று கூறினார்.
மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மாணவிகளுடன் உரையாடிபாது, மனுஸ்மிருதி மனப்பான்மையை விமர்சித்தார். ஆணாதிக்கத்தை தகர்க்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி "ஆக்கபூர்வமான பங்கை வகிப்பார் என்று நாடு எதிர்பார்த்தது; ஆனால், அந்தப் பங்கையும் நீங்கள் பாழாக்கி முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.
நகர்ப்புற நக்சல்களின் கைகளில் இந்தியாவின் தற்போதைய தலைமுறையின் எதிர்காலத்தை ஏன் பாழாக்க விரும்புகிறீர்கள்? இந்தியாவின் பாரம்பரியத்தை ஏன் அழிக்க விரும்புகிறீர்கள்? இந்தியாவின் எதிர்காலத்தை வைத்து ஏன் விளையாட விரும்புகிறீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.