கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று(டிச. 13) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி, திருவனந்தபுரம் மாநகராட்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (என்டிஏ), கோழிக்கோடு மாநகராட்சியில் இடதுசாரி ஜனநாயக முன்னணியும்(எல்டிஎஃப்), மீதமுள்ள 4 மாநகராட்சிகளில்(கொச்சி, கண்ணூர், கொல்லம், திருச்சூர்) ஐக்கிய ஜனநாயக முன்னணியும்(யுடிஎஃப்) வெற்றி பெற்றுள்ளன.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் ஆச்சரியமளிக்கும் விதத்தில் கேரளத்தின் 3 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கரிம்குன்னம் கிராம பஞ்சாயத்தில் பீனா குரியன்,
முல்லன்கொல்லி கிராம பஞ்சாயத்தில் சினி ஆண்டனி,
உழவூர் கிராம பஞ்சாயத்தில் ஸ்மிதா லூக் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தகவலை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயரும் மூத்த தலைவருமான டாக்டர் ஷெல்லி ஓபராய், ‘பெண்கள் அதிகாரம் பெறுதலை, அவர்கள் வளர்ச்சியைக் காட்டும் சிறந்த உதாரணமாக இந்த வெற்றி அமைந்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.