ஹைதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
அப்போது தன்னுடைய கையொப்பமிட்ட ஜெர்சியை ராகுலுக்கு அவர் பரிசளித்தார். தொடர்ந்து இருவரும் அங்கு கலந்துரையாடினர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராகுல் காந்தி வருவதற்கு முன்பு, மெஸ்ஸியுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி ராஜீவ் காந்தி சர்வதேச (ஆர்ஜிஐ) கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் சில நிமிடங்கள் செலவிட்டார்.
அவர் ஜெர்சி அணிந்து மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடினார். முன்னதாக, இன்று(டிச. 13) காலை கொல்கத்தாவில் நடைபெற்ற ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாலையில் ஹைதராபாத் நகரைச் சென்றடைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.