ஓமனில் பிரதமர் மோடி :
பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பாவிலிருந்து புறப்பட்டு புதன்கிழமை(டிச. 17) மாலை ஓமன் சென்றடைந்தார்.
முன்னதாக, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த 15-ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்பட்டு ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடி, அதனைத்தொடர்ந்து, 16-ஆம் தேதி எத்தியோப்பியாவுக்குச் சென்றார். இந்த நிலையில், அங்கிருந்து இன்று ஓமனுக்குச் சென்றுள்ளார். மஸ்கட் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி குடும்பங்கள் பல திரண்டிருந்து பிரதமர் மோடியை வரவேற்றன.
பிரதமர் மோடியின் ஓமன் பயணத்தில் கவனிக்கப்பட வேண்டியவை:
ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு விமானத்தில் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்(சிஇபிஏ) வெற்றிகரமாக கையொப்பமாக உள்ளதுடன் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின்றன.
சிஇபிஏ-வால் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகள் வலுவடைவதுடன் இருதரப்பு வர்த்தகத்தில் புதியதொரு அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று ஓமனுக்கான இந்திய தூதர் ஜி. வி. ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
ஓமன் அரசுத் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின் மோடி நாளை(டிச. 18) தாயகம் திரும்பவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.