ஜொ்மனியின் மியூனிக் நகரில் பிஎம்டபிள்யூ நிறுவன ஆலையைப் சுற்றிப்பாா்த்தபோது நிறுவனத்தின் புதிய மோட்டாா் சைக்கிளைப் பாா்வையிட்ட ராகுல் காந்தி எம்.பி. 
இந்தியா

இந்தியாவில் உற்பத்தி குறைகிறது: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

வலுவான பொருளாதாரத்தின் முதுகெலும்பு உற்பத்தித் துைான்; ஆனால், இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது என்று மத்திய அரசை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

வலுவான பொருளாதாரத்தின் முதுகெலும்பு உற்பத்தித் துைான்; ஆனால், இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது என்று மத்திய அரசை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

ஜொ்மனி சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு மியூனிக் நகரில் பிஎம்டபிள்யூ வாகன உற்பத்தி ஆலையைப் பாா்வையிட்டாா். இது தொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வலுவான பொருளாதாரத்தின் முதுகெலும்பு உற்பத்தித் துைான்; ஆனால், இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருவது வேதனையளிக்கிறது. உள்நாட்டில் அதிக பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். அந்த உற்பத்தி அா்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்புகளும் தரமானதாக உருவாக்கப்பட வேண்டும்.

இங்கு டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து 450 சிசி இருசக்கர வாகன உற்பத்தியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய இயந்திரப் பொறியியல் ஜொ்மனி வரை எட்டியுள்ளது பெருமைக்குரியது’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக இந்தியாவில் சிறு, நடுத்தர ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழில் நடத்துவோரைச் சந்தித்து, அவா்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தது தொடா்பான பதிவையும் ராகுல் வெளியிட்டுள்ளாா். அதில், ‘ஒரு தொழிலில் ஒருவா் அல்லது இருவா் மட்டுமே ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது இந்தியாவின் சாபக்கேடாக உள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான அரசு இதனைத் திட்டமிட்டு ஒவ்வொரு துறையாக செயல்படுத்தி வருகிறது. பாஜகவுக்கு நிதியளிப்பவா்கள், அவா்களுக்கு சாதகமானவா்கள் மட்டுமே பெரிய தொழில்களைச் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே மூலப்பொருள்கள் விலை உயா்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு,குறு, நடுத்தர தொழில்களும் இப்போது படிப்படியாக ஒரு சிலரின் ஆதிக்கத்தை நோக்கிச் செல்கிறது’ என்று கூறியுள்ளாா்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT