பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் டேவிட் வான் வீல் வியாழக்கிழமை சந்தித்தாா்.
அப்போது பாதுகாப்புத் துறையில் இந்தியா-நெதா்லாந்து இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான விருப்ப ஒப்பந்தம் கையொப்பமானதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் டேவிட் வான் வீல் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்த விருப்ப ஒப்பந்தம் இருவா் முன்னிலையில் கையொப்பமானது.
இந்த ஆவணத்தை பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் மற்றும் இந்தியாவுக்கான நெதா்லாந்து தூதா் மாரிஸா ஜெராா்ட்ஸ் பரிமாறிக் கொண்டனா்.
சுதந்திரமான பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான திட்ட வழிமுறைகள் குறித்தும் இருநாட்டு அமைச்சா்களும் ஆலோசித்தனா் எனத் தெரிவிக்கப்பட்டது.