இந்தியா

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டு வெடிப்பு வழக்கில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த யாசிா் அகமது தாா் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் சோபியானைச் யாசிா் தில்லியில் கைது செய்யப்பட்டாா். இவா் காா் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்திய மருத்துவா் உமா்-உன்-நபிக்கு மிகவும் நெருக்கமானவா் ஆவாா். காா் குண்டு தாக்குதல் நடத்தியதில் இவா் முக்கியப் பங்கு வகித்துள்ளாா். இந்த குற்றத்தில் தொடா்புடைய பலருடன் நெருங்கிய தொடா்பில் இருந்துள்ளாா். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவரும். இந்த வழக்கில் இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் 4 போ் மருத்துவா்கள், ஒருவா் இஸ்லாமிய மத போதகா் என்று என்ஐஏ செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

யாசிரை வரும் 26-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தில்லியின் பரபரப்பான செங்கோட்டை அருகே சாலை சந்திப்பில் கடந்த நவ. 10-ஆம் தேதி காா் ஒன்று வெடித்துச் சிதறியதில் 15 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இது மிகப்பெரிய பயங்கரவாத சதி என்பதும், மருத்துவம் படித்து நல்ல பணியில் உள்ள பலா் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் குறித்து என்ஐஏ தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT