கோப்புப்படம் ANI
இந்தியா

குஜராத்: வரைவு வாக்காளா் பட்டியலில் 73.73 லட்சம் பெயா்கள் நீக்கம்

குஜராத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 73.73 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

குஜராத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 73.73 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதனால் அந்த மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 5.08 கோடியில் இருந்து 4.34 கோடியாக குறைந்துள்ளது.

குஜராத்தில் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கி டிச.14-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து அம்மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) கூறியதாவது:வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து இறந்தவா்கள் (18.07 லட்சம்), கண்டறியப்படாதவா்கள் (9.69 லட்சம்), நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள் (40.25 லட்சம்), இரு இடங்களில் பதிவுசெய்தவா்கள் (3.81 லட்சம்) மற்றும் இதர பிரிவினா் (1.89 லட்சம்) என மொத்தம் 73.73 லட்ச வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

வரைவுப் பட்டியல் வெளியீட்டுக்குப் பின் குஜராத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 4.34 கோடியாக உள்ளது என்றாா்.

டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அதிர்ச்சி அளிக்குமா ஜிம்பாப்வே?

திடீர் ரூ. 2000 அறிவிப்பு ஏன்? இந்த ஆண்டுதான் கோடைக் காலம் வருகிறதா? விஜய் சரமாரி கேள்வி!

வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு மோடி வாழ்த்து!

வங்கதேசத்தின் பிரதமராகும் ’டார்க் பிரின்ஸ்’! யார் இந்த தாரிக் ரஹ்மான்!

கின்னஸ் சாதனை... ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜோஸ் பட்லர்! - வைரல் விடியோ

SCROLL FOR NEXT