பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் சனிக்கிழமை (டிச. 20) காலை அரசு முறைப் பயணமாகச் செல்கின்றார்.
இதையடுத்து, நதியா மாவட்டத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அவர் துவங்கிவைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் கொல்கத்தா மற்றும் டார்ஜிலீங்கின் சிலிகுரி இடையில் எளிதில் பயணம் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நாளை மதியம் அசாம் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, குவாஹட்டி மாவட்டத்தில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டத்தைத் திறந்துவைக்கவுள்ளார்.
இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) காலை குவாஹட்டியில் உள்ள ஸாஹித் ஸ்மராக் க்ஷேத்ராவில் தியாகிகளுக்கு பிரதமர் மோடி மரியாதைச் செல்லுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.
பின்னர், திப்ருகார் மாவட்டத்தில் நடைபெறும் அசாம் வெலி உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் அமோனியா - யூரியா திட்டத்தின் பூமி பூஜையில் அவர் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சத்தீஸ்கரின் 39 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.