மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்த பாஜக அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005ஐ இரத்து செய்து, அதற்குப் பதிலாக வி பி – ஜி ராம் ஜி, 2025 சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.
விடியோவில் அவர் பேசியதாவது, “கடந்த 11 ஆண்டுகளில், கரோனா காலத்திலும் ஏழைகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்த மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
சமீபத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கட்டமைப்பை விவாதமோ ஆலோசனையோ இல்லாமல் தன்னிச்சையாக பாஜக அரசு மாற்றியது.
இப்போது, எங்கே யாருக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை தில்லியில் அமர்ந்திருக்கும் அரசால் எப்படி முடிவு செய்ய முடியும் என்பது கேள்வி.
இந்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம், மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் நலன்களைத் துன்புறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.