திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 38 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.
இந்தியன் வங்கியின் அதிகாரி ஒருவர், இந்த நன்கொடைக்கான வரவோலையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கய்யா சௌதரியிடம் வழங்கினார்.
அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பயணப் பொதி ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 37,97,508 தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.