மேற்கு வங்க மாநில வேலைத் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரைச் சூட்டி முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் ரத்து நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக, மேற்கு வங்க மாநில அரசின் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மகாத்மா காந்தி கர்மஸ்ரீ பெயரைச் சூட்டி, மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005ஐ ரத்து செய்து, அதற்குப் பதிலாக வி பி – ஜி ராம் ஜி, 2025 சட்டமுன்வடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில்தான், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. ஆனால், ஏழைகளை ஒருபோதும் நாங்கள் கைவிட மாட்டோம் எனக் கூறிய மமதா பானர்ஜி, கர்மஸ்ரீ வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மகாத்மா காந்தி கர்மஸ்ரீ எனப் பெயர் மாற்றம் செய்து, அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.