ஆா்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு :
‘இந்தியா ஒரு ஹிந்து நாடு’ என்பதை வலியுறுத்திப் பேசியிருக்கும் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்க் (ஆா்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், இதுவே உண்மை என்பதால், இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள அரசமைப்பு ஒப்புதல் எதுவும் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய மோகன் பாகவத், “சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இந்தச் செயல் எப்போதிலிருந்து நடைபெறுகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, இதற்கும்கூட அரசமைப்பின் ஒப்புதல் தேவையா? ஹிந்துஸ்தான் ஒரு ஹிந்து நாடு.
இந்தியாவை எவரெல்லாம் தமது தாய்நாடாகக் கருதி இந்திய கலாசாரத்தை பாராட்டுகிறார்களோ, ஹிந்துஸ்தான் நிலத்தில் குறைந்தபட்சம் ஒரேயொரு மனிதராவது உயிருடன் இருந்து அவர் இந்திய மூதாதையர்களின் பெருமையைக் கொண்டாடுகிறார்களோ, அதுவரை இந்தியா ஒரு ஹிந்து நாடே. இதுவே சங்கின் சித்தாந்தமாகும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலை பிரகடனப்படுத்தியிருந்த காலத்தில், அரசமைப்புச் சட்டத்தில் ‘சோசலிசம்’ சொல்லுடன் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லும் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்னதாக, அரசமைப்புச் சட்டத்தில் ’மதச்சார்பின்மை’ இடம்பெறவில்லை.
ஆர்எஸ்எஸ் இயக்கம் பற்றி ‘முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்ற தவறான கண்ணோட்டம் நீங்க வேண்டுமானால், மக்கள் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களைப் பார்வையிட்டு எங்கள் செயல்களை கவனித்தால் அந்த தோற்றம் மறையும்.
இந்த இயக்கம் ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக வாதாடுகிறது. நாங்கள் தேசியவாதிகளே தவிர, முஸ்லிமக்ளுக்கு எதிரானவர்கள் அல்ல” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.