நடிகை சமந்தா  
இந்தியா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

ஹைதராபாத்தில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.

தினமணி செய்திச் சேவை

ஹைதராபாத்தில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடிகை சமந்தா கடை திறப்பு நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார். அப்போது அங்கு அவரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர்.

மேலும் சிலர் சமந்தாவுடன் புகைப்படம் எடுக்க முயன்றதால் ரசிகர்களின் கூட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டார்.

பின்னர் சமந்தாவை பாதுகாவர்கள் மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகை நிதி அகர்வால் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டதோடு ஒருசிலர் அத்துமீறிய செயலிலும் ஈடுபட்டனர்.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Visuals circulating online show Samantha Ruth Prabhu struggling to reach her vehicle after attending the event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

ரிவால்வர் ரீட்டா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

TVK-வின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா! விஜய் பங்கேற்பு! | Chennai

திமுக தேர்தல் அறிக்கை: கனிமொழி தலைமையில் முதல் கூட்டம்!

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌதரி?

SCROLL FOR NEXT