ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் முதல்முறையாக திரைப்பட வளாகம் (மல்டிபிளக்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இதனைக் கட்டியுள்ளது.
பல திரைகளைக் கொண்ட அரங்குகள், திரைப்பட வளாகங்களாக மாறி வருகின்றன. தற்போது பெரும்பாலும் திரைப்பட வளாகங்களாக மாறியுள்ள நிலையில், லடாக்கில் முதல் திரைப்பட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் லே - மணாலி சாலையில் அமைந்துள்ள சபூ பகுதியில் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் லே மலைப்பகுதியின் முதல் திரைப்பட வளாகத்தை அமைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரத்தில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
டோல்பி 7.1 அல்ட்ரா சவுன்ட், முப்பரிமாண காட்சிகள் கொண்ட திரைப்படங்களையும் (3டி) திரையிடும் வகையில் இரண்டு திரைகள் (ஸ்கிரீன்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பேசிய பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அயஜ் பிஜிலி கூறியதாவது, ''லே பகுதியில் முதல் மல்டிபிளக்ஸ் கட்டியுள்ளது உண்மையாகவே பெருமைமிகுந்த தருணம். இதன்மூலம் பார்வையாளர்களை எங்கிருந்தாலும் கவர முடியும் என்ற எங்கள்
நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11,500 அடி உயரத்தில் மல்டிபிளக்ஸ் திறந்துள்ளது எங்கள் உறுதித்தன்மையை பிரதிபலிக்கிறது. கம்பீரமான மலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்த மல்டிபிளக்ஸ் பிவிஆர் ஐநாக்ஸ் பயணத்தில் குறிப்பிடத்தக்கதாக அமையும்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.