போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ரஞ்சித் சிங் (33) விமான நிலையத்தின் வருகை பகுதியில் 4.284 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
தாய் ஏர்வேஸ் விமானத்தில் பாங்காக்கிலிருந்து வந்திருந்த அவர், விமான நிலைய பாதுகாப்பு மற்றும் சுங்கத் துறையினரின் கூட்டு குழுவால் பாதுகாப்புச் சோதனையின்போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
மேலும், புனித் சர்மா (33) என்பவரும் அந்த போதைப்பொருளை பெற்றுச் செல்ல விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இருவரும் விசாரணைக்காக நேபாள காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.