அமித் ஷா - நிதீஷ்குமார். (கோப்புப்படம்)  ANI
இந்தியா

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை சந்தித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை சந்தித்தார்.

தில்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மாநில வளர்ச்சி சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்களை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான விவகாரமும் இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் மகர சங்கராந்திக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிகிறது. நிதீஷ் குமார், பிகார் முதல்வராக பதவியேற்ற பிறகு அவரின் முதல் தில்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Union Home Minister Amit Shah on Monday met Bihar Chief Minister Nitish Kumar, who is visiting the national capital for the first time after being sworn-in for a record fifth consecutive term a month ago.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமண பந்தத்தில் இணைந்த பிரபல தொடர் நடிகர்!

2025-ன் ஹாரர் திரைப்படங்கள் ஓர் பார்வை!

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5,000 வழங்க வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

2025-ல் அறிமுகமான சின்ன திரை தொடர்கள்!

காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 638 புள்ளிகளுடனும், நிஃப்டி 206 புள்ளிகளுடனும் நிறைவு!

SCROLL FOR NEXT