சந்தாலி மொழியில், மொழிப்பெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
தில்லியில், பழங்குடியின மொழியான சந்தாலியில் மொழிப்பெயர்க்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (டிச. 25) வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தாலி மொழியின் ஒல் சிக்கி எழுத்துமுறையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, மொழிப்பெயர்க்கப்பட்ட அரசியலமைப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி, குடியரசுத் தலைவர் முர்மு கூறியதாவது:
“சந்தாலி மொழியின் ஒல் சிக்கி எழுத்துமுறையில் மொழிப்பெயர்க்கப்பட்ட அரசியலமைப்பை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைக்கொள்கிறேன். சந்தாலி மொழியில் அரசியலமைப்பு கிடைப்பது அம்மொழியைப் பேசும் சமூகத்தினர் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்” எனக் கூறியுள்ளார்.
தில்லியில், குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, நாட்டின் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றான சந்தாலி மொழியை, ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மிசோரமில் பெண் பத்திரிகையாளர் சடலமாக மீட்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.