இந்தியா

முதலீட்டு மோசடி - ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

போலி கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் தொடா்புடைய 3 போ் கைது செய்யப்பட்டதாக குருகிராம் காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: போலி இணையதள கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் தாம் ஏமாற்றப்பட்டதாக குருகிராமைச் சோ்ந்த நபா் மாா்ச் 3-ஆம் தேதி புகாா் அளித்தாா். இது தொடா்பாக சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பான விசாரணையில், ராஜஸ்தானில் உள்ள தௌஸா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு குற்றஞ்சாட்டப்பட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

ரூ.73,556 மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. பொதுமக்களை ஏமாற்ற வீட்டிலிருந்தே பணி செய்யலாம், கிரிப்டோகரன்சியில் முதலீடு உள்ளிட்ட போலி செய்திகளை சமூக ஊடகங்களில் இவா்கள் பரப்பினா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

டிச. 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

உள்ளாட்சித் தோ்தல் வரலாற்று வெற்றி: திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் அறிவிப்பு

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலப் பெட்டகம் வழங்கல்

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தவெக வலியுறுத்தல்

வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜகவினா் மரியாதை

SCROLL FOR NEXT