குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சந்தித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவரின் மாளிகையில், சி.பி. ராதாகிருஷ்ணனை, இன்று (டிச. 26) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அனுபவங்களை, குடியரசுத் துணைத் தலைவருடன் ஞானேஷ் குமார் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் இந்தோனேசியா நாட்டின் தூதர் இனா. எச். கிருஷ்ணமூர்த்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்துள்ளார்.
முன்னதாக, ஞானேஷ் குமார் தலைவராகப் பதவி வகிக்கும் சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்தில் (ஐடிஇஏ), இந்தோனேசியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.