கேரளத்தில் நகராட்சித் தலைவராக முதன்முறையாக 21 வயது இளம்பெண் தியா பினு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தின் பாலா நகராட்சியில் 21 வயதேயான இளங்கலை பொருளாதாரத்தில் பட்டம்பெற்ற தியா பினு சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
தொடர்ந்து, யுடிஎஃப் ஆதவுடன் நகராட்சித் தலைவராக தியா பானு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மிக இளம் வயது நகராட்சித் தலைவர் என்ற பெருமையையும் தியா பினு பெற்றார்.
நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியா பேசுகையில், "இந்த உயரிய பொறுப்பை நான் மதிக்கிறேன். பாலா நகராட்சியின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்காக என்னால் முடிந்தவரையில் பாடுபடுவேன்.
எனது 25 சக கவுன்சிலர்களின் முழு மனதான ஆதரவை எதிர்பார்க்கிறேன். நகராட்சியை வழிநடத்துவதில் அவர்களின் ஆலோசனையை நான் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தியாவின் தந்தை மற்றும் மாமாவும் சுயேட்சையாகப் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அதிக இடங்களில் வெற்றி பெற்றநிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவை பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.