ஹிமாசலத்தில் மருத்துவர்கள் போராட்டம் :
ஷிம்லா : ஹிமாசல பிரதேசத்தில் மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் நோயாளிகள் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர். மருத்துவர்கள் மீதான அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் சனிக்கிழமை (டிச. 27) முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஹிமாசல பிரதேசத்தில் மருத்துவர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, வெளிநோயாளிகள் சனிக்கிழமை(டிச. 27) உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர். இவ்விவகாரத்தில் அரசும் மருத்துவர்களும் விரைந்து பேசி சுமூக தீர்வு காண அவர்கள் வலியுறுத்தினர். ஆயினும், உள்நோயாளிகள் பிரிவிலும் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கான சிகிச்சை தடையின்றி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.