பிகாரில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
பிகாரின் ஜமுய் மாவட்டத்தில் எட்டு சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் திடீரென தடம்புரண்டன.
இதனால் லஹாபோன் மற்றும் சிமுல்தலா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர். நல்வாய்ப்பாக விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
விபத்து நடந்த இடத்திற்கு அசன்சோல், மதுபூர் மற்றும் ஜாஜா நிலையங்களில் இருந்து விபத்து நிவாரண ரயில்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.