தற்கொலை 
இந்தியா

குருகிராம்: காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை!

குருகிராமில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஃபரூக்நகா் காவல் நிலையத்தில் காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

குருகிராமில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஃபரூக்நகா் காவல் நிலையத்தில் காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இருப்பினும், உயிரிழந்தவரின் குடும்பத்தின், இது குறித்து முறையாக தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் காவல் துறையினா் முதலில் மறைத்ததாக குற்றஞ்சாட்டினா். மேலும், இந்த தற்கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) லலித் தலால் கூறியதாவது: காவல் நிலையத்தில் உயிரிழந்த ராஜஸ்தானின் பிவாடி மாவட்டத்தில் உள்ள ராம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசிப் இக்பால் (22), ஃபரூக்நகரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவா் மீது 2022-ஆம் ஆண்டு முதல் தில்லி, ஃபரீதாபாத் மற்றும் குருகிராமில் மொத்தம் 8 திருட்டு வழக்குகள் உள்ளன. அவருக்கு இதில் 4 வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.

போலீஸ் காவலில் இருந்த அவா் குளிா்கால பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கிழிந்த போா்வை உறையைப் பயன்படுத்தி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஜிஸ்திரேத் முன்னிலையில் உடற்கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT