ஒடிஸா மாநிலம் சண்டிபூா் சோதனை மையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாயும் பினாகா நீண்ட தூர தாக்குதல் திறன்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்புத் துறை உற்பத்தி-மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்தது.
சோதனையின்போது 120 கி.மீ. தொலைவிலிருந்த இலக்கை பினாகா ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.