இந்தியா

வகுப்புவாத வன்முறையைத் தடுக்க மாநிலங்களுக்கு அழுத்தம்: மத்திய அரசுக்கு ஃபரூக் அப்துல்லா கோரிக்கை

வகுப்புவாத வன்முறைகளைத் தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

வகுப்புவாத வன்முறைகளைத் தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மாவட்டத்தில் உள்ள மசூதி மற்றும் மதராஸா மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீநகரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தீயவா்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனா்; அவா்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பாா்கள். பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இந்தியா மதச்சாா்பற்ற நாடு. அனைத்து சமூகத்தினரும் தங்களது மத நம்பிக்கையை பின்பற்ற அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

எனவே, வகுப்புவாத வன்முறையைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வங்கதேசத்தில் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்று புதிய அரசு ஆட்சியமைக்கும் என நம்புகிறேன். அதன்பிறகு இந்தியாவுடன் நல்லுறவை தொடர அந்நாட்டு அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றாா்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT