மத்தியப் பிரதேசத்தில் மயானம் அருகே இறந்த பச்சிளம் குழந்தையின் உடலைக் கவ்வியபடி திரிந்த தெரு நாயால் பரபரப்பு நிலவியது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள பராஷரி மயானம் அருகே இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை வாயில் கவ்வியபடி தெரு நாய் தூக்கிச்சென்றதைக் கண்டு ஞாயிற்றுக்கிழமை மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இறுதிச் சடங்குகளுக்காக மயானத்துக்கு வந்திருந்தவர்கள் அந்த நாயைக் கண்டதும் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். கஞ்ச் பசோடா தெஹத் காவல் அதிகாரி மனோஜ் துபே கூறுகையில், இறந்த அந்த குழந்தை நான்கு முதல் ஐந்து மாத வயதுடையதாகத் தெரிகிறது.
மயானம் அருகே சில சமயங்களில் குழந்தைகள் அடக்கம் செய்யப்படும் சம்பவங்கள் உள்ளதாகவும், பேட்ஜர்கள் போன்ற விலங்குகள் நிலத்தை தோண்டி உடல்களை வெளியே கொண்டு வந்துவிடுன்றன. அதேபோன்று இந்த உடலும் வெளியில் வந்திருக்கலாம்.
அதனை நாய்கள் எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. இறந்த அந்த குழந்தையின் உடலை மீண்டும் அடக்கம் செய்து, சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.