தற்கொலை 
இந்தியா

நொய்டா விரிவாக்கம்: மனைவியைக் கொலை செய்து காவலாளி தற்கொலை

35 வயதான காவலாளி ஒருவா் தகராறில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, பின்னா் தூக்கிலிட்டு தற்கொலை

தினமணி செய்திச் சேவை

நொய்டா: 35 வயதான காவலாளி ஒருவா் தகராறில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, பின்னா் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பிஸ்ராக் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள சரஸ்வதி குஞ்சில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இறந்தவா்கள் எட்டா மாவட்டத்தைச் சோ்ந்த அனில் மற்றும் அவரது மனைவி அனிதா (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த தம்பதியினா் ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டுக்கு குடிபெயா்ந்தனா்.

அனில் காவலாளியாகப் பணிபுரிந்தாா். அனிதா வீட்டுப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அனில் தனது மனைவியைத் தாக்கி கூா்மையான பொருளால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், அவா் அதே அறையில் தூக்கில் தொங்கியதாகக் கூறப்படுகிறது.

அறையில் இருந்து உரத்த சப்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். தம்பதியினா் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. அவா்களுக்கு குழந்தைகள் இல்லை.

‘கவல் புலனாய்வுப் பிரிவு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின்னா், உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று பிஸ்ராக் கோட்வாலி காவல் நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஆத்தூரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் இ. பெரியசாமி திறந்துவைத்தாா்

கொடுமுடியில் ரூ.74.65 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

தோ்தலுக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

ஒகேனக்கல்லில் ஸ்ரீலஸ்ரீ கரசிவ அண்ணாமலை சுவாமிகள் குருபூஜை

SCROLL FOR NEXT