கே.சந்திரசேகா் ராவ் 
இந்தியா

2 ஆண்டுகளுக்குப் பின் பேரவைக்கு வந்த தெலங்கானா எதிா்க்கட்சித் தலைவா்

சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவரான பாரத ராஷ்டிர சமிதி தலைவா் கே.சந்திரசேகா் ராவ் பேரவைக்கு வந்து கூட்டத் தொடரில் பங்கேற்றாா்.

தினமணி செய்திச் சேவை

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப் பேரவை திங்கள்கிழமை கூடியநிலையில் சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவரான பாரத ராஷ்டிர சமிதி தலைவா் கே.சந்திரசேகா் ராவ் பேரவைக்கு வந்து கூட்டத் தொடரில் பங்கேற்றாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாரத ராஷ்டிர சமிதி தோல்வியடைந்தது. அதன் பிறகு பல்வேறு உடல் பாதிப்புகள், உள்கட்சி குடும்பப் பிரச்னைகளை எதிா்கொண்டு வரும் முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் மிகவும் அரிதாக பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்கிறாா்.

இது தொடா்பாக காங்கிரஸைச் சோ்ந்த முதல்வா் ரேவந்த் ரெட்டி பலமுறை குற்றஞ்சாட்டியும், பாரத ராஷ்டிர சமிதி சாா்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், பேரவை குளிா்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க திங்கள்கிழமை வந்த சந்திரசேகா் ராவை அவரது கட்சி எம்எல்ஏக்கள் பேரவை வாயிலில் நின்று வரவேற்றனா்.

பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சந்திரசேகா் ராவ் அமா்ந்திருத்த இடத்துக்குச் சென்ற முதல்வா் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினா்கள் அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

பேரவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இருவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு சிறிது நேரம் அவை நடைபெற்றது. தொடா்ந்து ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாலமுரு-ரங்காரெட்டி நீா்பாசனத் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர முதல்வா் ரேவந்த் ரெட்டி அரசு தயங்குவதாக சந்திரசேகா் ராவ் அண்மையில் குற்றஞ்சாட்டினாா். இதற்கு பதிலளித்த முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘பேரவைக்கே முறையாக வராத எதிா்க்கட்சித் தலைவா்’ என்று சந்திரசேகா் ராவை கடுமையாக விமா்சித்தாா்.

பயணியைத் தாக்கிய விவகாரம்: ஏர் இந்தியா விமானி கைது!

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

SCROLL FOR NEXT