ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதினின் விட்டைக் குறிவைத்து, உக்ரைன் ராணுவம் 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு நிராகரித்துள்ளது.
இருப்பினும், உக்ரைன் மீதான ரஷியாவின் இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு உலகின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாக்குதலில் ரஷிய அதிபர் புதினின் வீடு குறிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வருத்தமளிக்கின்றன என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் அந்தப் பதிவில் கூறியதாவது:
“ரஷிய அதிபரின் வீடு குறிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பகையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சம்பந்தப்பட்ட அனைவரும் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.