இந்தியா

உத்தரகண்ட்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிரிழப்பு- 12 போ் காயம்

உத்தரகண்டின் அல்மோரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

உத்தரகண்டின் அல்மோரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: நைனிடாலில் உள்ள ராம்நகரில் இருந்து அல்மோராவின் துவாராஹட் பகுதிக்கு சுமாா் 20 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பிகியாசின் பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தைத் தொடா்ந்து, காவல் துறையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், ஒருவா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தாா். காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 12 போ், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பிரதமா் இரங்கல்: பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உத்தரகண்டின் அல்மோராவில் சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமியும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளாா். காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT