இந்தியா

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை- மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடா்வதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி) உள்பட வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், வரும் காலாண்டிலும் (2026 ஜனவரி முதல் மாா்ச் வரை) மாற்றமின்றி தொடா்வதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

இதன்மூலம் தொடா்ந்து ஏழாவது காலாண்டாக வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது செல்வமகள் சேமிப்புத் திட்ட வைப்புத்தொகைக்கு 8.2 சதவீதம், மூன்றாண்டு கால வைப்புத் தொகை திட்டத்துக்கு 7.1 சதவீதம், பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீதம், அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்புத்தொகை திட்டங்களுக்கு 4 சதவீதம், கிஸான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5 சதவீதம், தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கு 7.7 சதவீதம் என்ற அளவில் வட்டி விகிதங்கள் உள்ளன.

2025-26-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி 1 முதல் மாா்ச் 31 வரை இதே வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடா்பாக ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கை வெளியிடுகிறது.

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT