உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரியை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
அப்போது, மருந்துகளுக்கான சுங்க வரிகள் குறித்த சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக தெரிவித்தார்.
உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 சதவிகிதம் வரியில் சலுகை அளிக்கப்படுகிறது என்றார்.
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் வாகங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.