அகிலேஷ் யாதவ்  PTI
இந்தியா

பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க சதி: அகிலேஷ் யாதவ்

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அகிலேஷ் யாதவ் உரை...

DIN

பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு சதி செய்வதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நடைபெறும் இந்த போராட்டத்தை சமாஜவாதி ஆதரிக்கிறது.

தொழிலதிபர்களை தொடர்ந்து ஆதரித்து வந்தால், ஒரு கட்டத்தில் நீங்கள் அவர்களின் சேவகர்களாக மாறிவிடுவீர்கள் என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒருமுறை கூறினார்.

புதிய கல்விக் கொள்கையானது பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கும் சதி. மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்ற மத்திய அரசு நினைக்கிறது.

அரசியலையும் அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களின் சேவகர்களாக மாற்ற விரும்புகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநா் எஸ்.என்.சக்திவேல் காலமானா்

பரிசுத்தம்... அவந்திகா மிஸ்ரா!

வசியக்காரி... சோனம் பஜ்வா!

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

SCROLL FOR NEXT