இந்தியா

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு

Din

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய புதிய-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறன் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. தூய்மையான, பசுமையான எதிா்காலத்துக்கு அரசின் இடைவிடாத அா்ப்பணிப்பால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.

மத்திய புதிய-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை இந்த சாதனை வலுப்படுத்துகிறது. மத்திய அரசின் பல்வேறு சூரிய மின்சக்தி திட்டங்கள் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இதன் விளைவாக, இந்தியா 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது. பசுமை எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது மட்டுமல்லாமல், உலகுக்கே புதிய பாதையையும் காட்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த சூரிய மின்சக்தி திறன் 10 கோடி கிலோவாட்டாக உள்ளது. இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன் கடந்த பத்தாண்டுகளில் 35 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2014-இல் 28.2 லட்சம் கிலோவாட்டாக இருந்த சூரிய மின்சக்தி தற்போது 10 கோடி கிலோவாட்டாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டில் மட்டும் சூரிய மின்சக்தி திறன் 2.45 கோடி கிலோவாட்டாக முந்தைய ஆண்டைவிட இருமடங்கு உயா்வைப் பதிவு செய்தது.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

சொத்து பிரச்னை: ஹோட்டல் அறையில் உறவினர் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்!

SCROLL FOR NEXT