இந்தியா

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிகார் ஆளுநர்!

மகா கும்பமேளாவில் பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புனித நீராடினார்.

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புனித நீராடினார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

நீராடிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிகார் ஆளுநர்,

எந்தவொரு மனிதனையும் தெய்வீக வழியில் பார்க்க வேண்டும் என்று எங்கள் கலாசாரம் கூறுகிறது.

'மானவ்' (மனிதன்) என்பது 'மாதவ்' (பகவான் கிருஷ்ணர்) வடிவமாகும், இதை இங்கே பெரிய அளவில் காணலாம் என்றார்.

அனைவரும் நமது பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் லட்சக்கணக்கானக்கானோர் பிரயாக்ராஜில் குவிந்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT