இந்தியா

கும்பமேளா: முதலீடே இல்லாமல் நாளொன்றுக்கு ரூ. 4,000 சம்பாதிக்கும் இளைஞர்!

கும்பமேளாவில் முதலீடு செய்யாமல் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்கள் பற்றி...

DIN

மகா கும்பமேளாவில் முதலீடு செய்யாமல் நாளொன்று ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.

திருவிழா நடைபெறும் இடங்களில் உணவு, விளையாட்டு பொருள்கள், அலகு சாதனப் பொருள்கள் விற்கும் கடைகள் போட்டு வியாபாரிகள் சம்பாதிப்பார்கள். இவை அனைத்துக்கும் முதலீடு அவசியமானது.

ஆனால், எவ்வித முதலீடும் இல்லாமல் மகா கும்பமேளாவில் நாளொன்றுக்கு ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாபெரும் ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து இதுவரை 40 கோடிக்கணக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் விடும் காணிக்கைகளை காந்தத்தை பயன்படுத்தி நாளொன்றுக்கு ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சேகரித்து வருகிறார்.

பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையை சேகரிப்பதன் மூலம் கணிசமான தொகையை சம்பாதித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் விடியோ ஒன்றில், ஒரு கயிற்றில் பல காந்தங்களை கட்டி, நீருக்குள் இறங்கும் இளைஞர் மீண்டும் கரைக்கு வரும்போது சில்லரைக் காசுடன் வருகிறார்.

அவர் விடியோ எடுத்த பக்தரின் சில கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஒருமுறை ஆற்றுக்குள் இறங்கி வெளியே வந்தால், ரூ. 200 முதல் ரூ. 250 வரை கிடைக்கும் என்றும், நாளொன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடியோவை பார்க்கும் பலரும், பட்டதாரிகள்கூட நாளொன்றுக்கு இவ்வளவு வருமான ஈட்ட மாட்டார்கள் என்று புலம்பி வருகின்றனர்.

வேப்பங்குச்சி விற்கும் இளைஞர்

அதேபோல், வேப்பங்குசியை விற்று நாளொன்று ரூ. 5,000-க்கும் மேல் இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.

அவர் கூறுகையில், “எனது காதலி ஒரு யோசனையைக் கூறினார், முதலீடே செய்யாமல் சம்பாதிக்க அறிவுறுத்தினார். சங்கமத்தில் வேப்பங்குச்சியை விற்பனை செய்வதன் மூலம் பெருமளவிலான தொகை சம்பாதித்து வருகிறேன்.

முதல் நான்கு நாள்களில் ரூ. 40,000 வரை சம்பாதித்துவிட்டேன். சில நாள்கள் ரூ. 10,000 வரைக்கும்கூட வேப்பங்குச்சியை விற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கும்பமேளாவில் மோனிஷா போஸ்லே புதிய படமொன்றில் நடிகையாக அறிமுகமாக இருப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்கிறீர்களா? என்னென்ன பாதிப்புகள் வரும்?

101 அறிஞர்களின் ஓவியங்கள் வரைந்து 14 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சி!

SCROLL FOR NEXT