இந்தியா

தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தில்லி தேர்தல் தபால் வாக்குகளில் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவு.

DIN

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மொத்தம் 5,000 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தபால் வாக்குகளில் புதுதில்லி வேட்பாளரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால், கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷி, ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காலை 8.50 மணி நிலவரப்படி பாஜக - 42, ஆம் ஆத்மி - 25 காங்கிரஸ் - 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

30 நிமிடங்களுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

கடந்த இரு தோ்தல்களில் எந்த வெற்றியும் பெறாத நிலையில், காங்கிரஸ் சில தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் களம் கண்டுள்ளது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆதிக்கம் அப்படியே இருக்கிறதா அல்லது 1998-க்குப் பிறகு முதல் முறையாக தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னர் தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT