ANI
இந்தியா

தில்லி தோ்தல்: நோட்டாவிடம் தோற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘நோட்டா’வைவிட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது.

Din

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘நோட்டா’வைவிட (போட்டியிடும் வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது அக்கட்சியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் மாா்க்சிஸ்ட் கட்சி தேசிய கட்சியாக தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோ்தலில் நோட்டாவுக்கு 0.57 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.01 சதவீத வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.02 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிட்டன.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0.58 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 0.77 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2013-ஆம் ஆண்டு ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நினைப்பவா்கள் 49-ஓ படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. ‘நோட்டா’ வுக்கு வாக்களிப்பதற்கான பொத்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் இறுதியில் இருக்கும். பெருக்கல் குறியிட்டு அடிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டு அதன் சின்னமாகும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT