பிரியங்கா காந்தி 
இந்தியா

தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது: பிரியங்கா பதில்

தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது என பிரியங்கா பதிலளித்துள்ளார்.

DIN

கேரள மாநிலம் கன்னூர் வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது என்று பதிலளித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.

இந்த நிலையில், கன்னூரில் செய்தியாளர்கள், பிரியங்காவிடம், தில்லி தேர்தல் நிலவரம் பற்றி கேட்டதற்க, அது பற்றி எனக்குத் தெரியாது, தேர்வு முடிவுகளை நான் அறிந்துகொள்ளவில்லை என்று பதிலளித்துள்ளார்.

11 மணி நிலவரப்படி, தில்லியில் 39 இடங்களில் பாஜகவும், 30 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. தில்லியின் அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவர்தான் என்று தில்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் புது தில்லியில் பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகவிட்ட நிலையி, காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாமல் கூட போகலாம். ஆனால், 70 தொகுதிகளில் அதிக இடங்களில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணமாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT