மாணவர்களுடன் பிரதமர் மோடி -
இந்தியா

மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல.. பிரதமர் மோடி

மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல என்று கூறினார் பிரதமர் மோடி

DIN

புது தில்லி: பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், தேர்வெழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் வகையில் பிரதமர் மோடி ஆண்டுதோறும் மாணவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

இன்று தில்லியில் நடைபெற்ற நிகழ்வில், தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, சில முக்கிய குறிப்புகளையும் கொடுத்து, மன அழுத்தம் இல்லாமல் படிக்குமாறு ஊக்கப்படுத்தினார் பிரதமர் மோடி.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் தேர்வையும் நல்ல முறையில் எழுத முடியும். யாருமே, தேர்வுதான் எல்லாமே என்று நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது. ஒருவர் தங்களால் இயன்ற அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஆனால், தேர்வுதான் எல்லாம் என மட்டும் நினைக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

உடல் ஆரோக்கியத்தை நன்கு பேணுமாறு அறிவுறுத்திய பிரதமர் மோடி, உறக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள், உறக்கமும்தான் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம் என்றும், சூரிய உதயத்தைக் காணுங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் விடுமுறையில் மெரீனாவில் அலைமோதிய கூட்டம் - போக்குவரத்து நெரிசல்!

ஆளுங்கட்சியின் ஆயுதமாக தணிக்கை வாரியம்: கனிமொழி எம்.பி.

யு-19 உலகக் கோப்பை - இந்தியா அபார வெற்றி!

இந்திய கடல் எல்லையில் பாக். மீனவர்கள் 9 பேர் கைது

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: வர்த்தகச் செயலாளர்

SCROLL FOR NEXT