இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார்.
இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் என பலதரப்பட்ட வகையிலான ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர்,
''பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோயல் பாரோட்டை சந்தித்தது மகிழ்ச்சி. செய்யறிவு, புதுமையான கண்டுபிடிப்புகள், ஆற்றல் உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். அதோடு மட்டுமின்று பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் குறித்தும் விவாதித்தோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று பிரான்ஸ் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் பிரதமா் மோடியும் தலைமை வகிக்கின்றனா்.
இதில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2047-ஆம் ஆண்டுவரை பல்வேறு துறைகளில் இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தை இமானுவல் மேக்ரானுடன் இணைந்து மறுஆய்வு செய்யவுள்ளார்.
இதையும் படிக்க | மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.