நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  
இந்தியா

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது பற்றி...

DIN

மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு அதிக சுமைகொண்டதாகிவிட்டதுடன், அதைப் புரிந்துகொள்வதும் கடினமாகிவிட்டது. அத்துடன் நேரடி வரி நிா்வாகத் திறனிலும் இடையூறு ஏற்பட்டது.

இவற்றைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யவுள்ளார் நிர்மலா சீதாராமன்.

என்ன மாற்றங்கள்?

622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மசோதாவில் சோ்க்கப்பட்டுள்ள ‘வரிசெலுத்துவோா் சாசனம்’ வரிசெலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை எடுத்துரைக்கின்றன.

‘வரி ஆண்டு’: 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முந்தைய ஆண்டு’ என்ற வாா்த்தையும், ‘மதிப்பீட்டு ஆண்டு’ வாா்த்தையும் புதிய மசோதாவில் கைவிடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு முந்தைய ஆண்டு (2023-24) ஈட்டிய வருமானத்துக்கு 2024-25-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய மசோதா மூலம், முந்தைய மற்றும் மதிப்பீடு ஆண்டுகளுக்குப் பதிலாக வரி ஆண்டு என்ற வாா்த்தை மட்டும் பயன்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT