இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்.

DIN

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'வயநாட்டில் கடந்த டிச. 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு சூழ்நிலை . இந்தப் பிரச்னையை சரிசெய்ய மத்திய அரசும் மாநில அரசும் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்னையை மக்களவையில் இன்று எழுப்புவேன் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடலோரம் மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

SCROLL FOR NEXT