பெட்ரோல் நிலையம் Center-Center-Tiruchy
இந்தியா

பூடான் பெட்ரோல் விலை: இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவருக்கு அதிர்ச்சி!

பூடான் பெட்ரோல் விலையைப் பார்த்து இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவருக்கு அதிர்ச்சி

DIN

இந்தியாவிலேயே சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் கீழ் இருந்துகொண்டிருந்தாலும், பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலைதான் இன்றைய ஹாட் டாப்பிக்.

பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100க்கும் குறைவுதான்.

அதுபோலவே நமது அண்டை நாடுகளிலும், பெட்ரோல் விலை கணிசமாகக் குறைந்தே இருக்கும். இந்த நிலையில்தான், இந்தியாவிலிருந்து பூடானுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெட்ரோல் நிலையத்துக்குள் சென்று விலையைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல், அதனை விடியோவா எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து பார்ப்பவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

பூடானில் இருக்கும் பாரத் பெட்ரோல் நிலையத்தைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியம் வந்துவிட்டதாம். அட நம்ம நாட்டு பெட்ரோல் நிலையமாச்சே என்று உள்ளே சென்றால், பெட்ரோல் விலையைப் பார்த்ததும் தலை சுற்றியிருக்கிறது.

அதாவது இந்திய நாட்டு ரூபாயில், பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.64 தானாம். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு விற்பனையாகும் நிலையில், பூடானில் அதே பெட்ரோல் ரூ.64க்கு விற்பனையாகிறது. இதில் இந்திய - பூடான் ரூபாய்களின் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றுதான். இந்த விடியோ கடந்த இரண்டு நாள்களில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT